மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து வழங்கும் விவகாரம்: தர்ணா போராட்டம்

மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து வழங்கும் விவகாரம்:  தர்ணா போராட்டம்
X

மக்கும் குப்பை மக்காத குப்பை விவகாரத்தைக் கண்டித்து சிவகங்கை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள்

குப்பைகளை பிரித்து தருவது வேலை அல்ல சேகரித்து மட்டுமே தருவோம் எனக் கூறி துப்புரவு பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்

நகராட்சி நிர்வாகம் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தனித்தனியாகப் பிரித்துத் தர கூறுவதைக் கண்டித்து காரைக்குடி நகராட்சி அலுவலக வாயிலில் 100 க்கு மேற்ப்பட்ட துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 36 வார்டுகள் உள்ளது சுமார் இரண்டரை லட்சம் மக்கள் இங்கு வசித்து வருகின்றனர் அவர்களிடையே குப்பைகளை சேகரிக்க நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட் டுள்ளனர். இவர்கள் வீடுகளுக்குச் சென்று குப்பைகள் வாங்கும்போது குப்பைகளை பிரித்து வாங்காமல் மொத்தமாக வாங்கி வருவதால், ஊழியர்களை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து தருமாறு நகராட்சி நிர்வாகம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

ஆனால், தங்களுக்கு குப்பைகளை பிரித்து தருவது வேலை அல்ல குப்பைகளை சேகரித்து மட்டும் தருவோம் என்று கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், குப்பை வண்டிகளுடன் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். நகராட்சி அலுவலக வாயிலில் குப்பை வண்டிகளை நிறுத்திவிட்டு நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி அலுவலகத்திற்கு வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி கட்ட வந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட நேரிட்டது.

Tags

Next Story