அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர சுவரொட்டி மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர சுவரொட்டி மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
X

மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒட்டப்படும் சுவரொட்டி.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவர்களுக்கு சுவரொட்டி, துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிப் புதூரில் இயங்கி வருகிறது அரசு தொழிற்பயிற்சி நிலையம். இங்கு பிட்டர், டர்னர், வயர்மென், வெல்டர் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 8வது தேர்ச்சி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு இரண்டு வருடபயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு தொழில் பயிற்சியில் விழிப்புணர்வை ஏற்படுத்த, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் அசோகன் தலைமையில் ஆசிரியர்கள் மோகனசுந்தரம், வேலைவாய்ப்பு அலுவலர் தீனதயாளன், உமா மகேஸ்வரன் ஆகியோர் கிராம,மற்றும் நகர்புற பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியும், பொதுமக்கள் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கியும் மாணவர்கள் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!