தமிழகத்தில் மூன்றாம் இடம் பிடித்த கோட்டையூர் பேரூராட்சிக்கு விருது
குப்பைகளை தரம் பிரிக்கும் பேரூராட்சி பணியாளர்கள்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ளது கோட்டையூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இதன் கீழ் கோட்டையூர் கோவை வேலங்குடி கல்லக்குடி என மூன்று வருவாய் கிராமங்கள் உள்ளது.
இந்த பேரூராட்சியில் 14266 வாக்காளர்கள் உள்ளனர். 15-வார்டு கொள்ளும் 136 தெருக்களும் கொண்டது. சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி, சுகாதார வசதிகள் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
மேலும் பாெதுமக்களிம் பெறப்பட்ட குப்பைகளை பிரித்து எடுத்து இயற்கை உரம் தயாரிப்பது, கொரானா வைரஸ் பரவும் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது போன்ற செயல்பாட்டிற்காக சிறந்த பேரூராட்சிக்கான 3 வது இடம் பிடித்தது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சரிடம் சிறந்த பேரூராட்சிக்கான மூன்றாம் இடத்திற்கான விருதை பெறவுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu