கோயில் உண்டியலை உடைக்க முடியாததால் தப்பியது காணிக்கை

கோயில்   உண்டியலை உடைக்க முடியாததால்  தப்பியது காணிக்கை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாழையூர் கிராமத்தில் உள்ள கூத்தாடி முத்து பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருட்டு முயற்சி தொடர்பாக ஆய்வு நடத்திய போலீஸார்

கோயில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திருடர்கள் திரும்பிச் சென்றனர்

தேவகோட்டை அருகே கோயில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திருட முயற்சிசெய்ய திருடர்கள் உண்டியலை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாழையூர் கிராமத்தில் கூத்தாடி முத்து பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில், சிவகங்கை,ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு இது குலதெய்வம் கோயிலாக இருந்து வருவதால், ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள். மேலும், பக்தர்கள் பணம், நகைகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியும் செல்கின்றனர். இந்நிலையில், நேற்று இரவு பூஜைகள் முடிந்து நிர்வாகிகள் கோயிலை பூட்டிவிட்டு சென்றனர்.இன்று காலை வழக்கம் போல் பூஜைக்காக கோயிலுக்கு வந்த பூசாரி, கோவில் வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தேவகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, திருடர்கள் உண்டியலை உடைக்க முயற்சித்ததும் அது முடியாமல் போனதால் தப்பிச் சென்றது தெரிய வந்தது..மேலும் திருடர்கள் கோயிலுக்குள் நுழைந்து திருட முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகளும் பதிவான நிலையில்,அதனைக் கொண்டு போலீஸார் திருடர்களைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story