காரைக்குடி தனியார் மண்டபத்தில் அதிமுக வேட்பாளர்கள், நிர்வாகிகள் கூட்டம்

காரைக்குடி தனியார் மண்டபத்தில் அதிமுக வேட்பாளர்கள், நிர்வாகிகள் கூட்டம்
X

காரைக்குடியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டம்.

காரைக்குடி தனியார் மண்டபத்தில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது.

தமிழகமெங்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் பிரச்சாரம் அனல் பறந்தது. நேற்றைய முன் தினம் தேர்தல் முடிவடைந்த நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் நேற்று ஓய்வு எடுத்துக்கொண்டதால் நகர் முழுவதும் அமைதி நிலவியது.

மீண்டும் இன்று காரைக்குடி அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட 36 வார்டுகளின் வேட்பாளர்களும் தனியார் மண்டபத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காரைக்குடி நகர் மன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பெறும் நிலையில், நகர் மன்ற தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுக்க ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!