15 மாதத்திற்குப்பின் காரைக்குடி - திருவாரூர் பயணிகள் சிறப்பு ரயில்

15 மாதத்திற்குப்பின் காரைக்குடி - திருவாரூர் பயணிகள் சிறப்பு ரயில்
X

பைல் படம்.

15 மாதங்களுக்கு பின், காரைக்குடி - திருவாரூர் முன்பதிவில்லா சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

காரைக்குடி- திருவாரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஆகஸ்ட் 4 முதல் மறு அறிவிப்பு வரும் வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வண்டி எண் 06197 திருவாரூர் - காரைக்குடி சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் திருவாரூரிலிருந்து காலை 08.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.15 மணிக்கு காரைக்குடி வந்து சேரும்.

மறுமார்க்கத்தில், வண்டி எண் 06198 காரைக்குடி - திருவாரூர் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காரைக்குடியிலிருந்து மதியம் 02.30 மணிக்கு புறப்பட்டு இரவு 08.30 மணிக்கு திருவாரூர் சென்று சேரும்.

இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில்களில் இருபுறமும் டீசல் என்ஜின் உள்ள டெமோ வகை ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும். இந்த ரயில்கள் மாங்குடி, மாவூர்ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயின்குடி, அறந்தாங்கி, வளர மாணிக்கம், பெரியகோட்டை, கண்டனூர் ,புதுவயல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!