காரைக்குடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

காரைக்குடியில்  தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள்

காரைக்குடி பகுதியில் காவல்துறை நடத்திய சோதனையில் சுமார் 1 இலட்சம் மதிப்பிலான 70 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்குத்தெரு பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்றசட்ட விரோத பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

தகவலின் அடிப்படையில்,ரவுடி ஒழிப்பு குழு சார்பு ஆய்வாளர் தவமணியின் தலைமையில் , சம்பவ இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் 70 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து.

அதனை பறிமுதல் செய்த போலீசார் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கார்த்திக் என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!