காரைக்குடி அருகே கண்டனூரில் 30 சவரன் நகை கொள்ளை

காரைக்குடி அருகே கண்டனூரில் 30 சவரன் நகை கொள்ளை
X

காரைக்குடி அருகே கண்டனூரில் 30 சவரன் நகை கொள்ளை

காரைக்குடி அருகே கண்டனூரில் கணவன் மனைவியை கட்டிப்போட்டு 30 சவரன் நகை கொள்ளையடித்த 3 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் தெப்பக்குளம் வீதியில் வசிப்பவர் தட்சிணாமூர்த்தி (63)ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி விசாலாட்சி.இவர்களுக்கு 2 மகன் ,ஒரு மகள் இருக்கும் நிலையில், அனைவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். தட்சிணாமூர்த்தியும் அவரது மனைவி விசாலாட்சி இருவர் மட்டும் தனியாக கண்டனூர் பங்களாவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் கணவன்,மனைவி இருவரையும் கட்டி போட்டுவிட்டு, பீரோவில் இருந்த 30 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. அதிக பரப்பளவு கொண்ட வீடு என்பதால் அக்கம், பக்கத்தினரிடம் உதவி கோர முடியாத நிலையில், கணவன், மனைவி இருவரும் தாங்களாகவே கயிற்றை அவிழ்த்துக்கொண்டு, சாக்கோட்டை காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சம்பவம் இடம் வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் பணம் நகையை கொள்ளையடித்து சென்ற மூவர் கொண்ட கும்பலை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!