3 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

3 லட்சம் மதிப்பிலான  தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்
X
காரைக்குடி: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 3 இலட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா தினசரி மார்க்கெட் அருகே காந்தி வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதிக்கு புகார் வந்தது.

இதனையடுத்து இன்று காலை ரவிச்சந்திரன் வீட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை செய்த போது, சுமார் ஒரு டன் அளவுள்ள 3 லட்சம் மதிப்பிலான பான்பராக், பான்மசாலா, புகையிலை போன்ற குட்கா பொருட்களும், தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளும் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் இது குறித்து போலீசில் அளித்த புகாரின் பேரில் ரவிச்சந்திரனை கைது செய்து குட்கா பொருட்கள் பதுக்கல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இவர் இதே வழக்கில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai solutions for small business