காரைக்குடியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 14 சவரன் நகை பறிப்பு

காரைக்குடியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 14 சவரன் நகை பறிப்பு
X

செயின் பறிப்பு குறித்து வழக்குப்பதிவு செய்யும் போலீசார்.

காரைக்குடியில் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்திலிருந்த 14 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துப்பட்டினம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், சந்திரா தம்பதியினர். இவர்கள் இன்று பக்கத்து தெருவில் இருக்கும் தங்களது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வீட்டில் இருந்து நடந்து சென்றுள்ளனர்.

முத்தூரணி பள்ளி பகுதியில் தம்பதியினர் வந்து கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மூதாட்டி சந்திராவை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த 14 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை என கூறப்படுகிறது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவம் இடம் வந்து மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!