திருமணத்திற்கு நகை வாங்க கொண்டு சென்ற ரூ10 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல்

திருமணத்திற்கு நகை வாங்க கொண்டு சென்ற ரூ10 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல்
X
அறந்தாங்கியில் கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் காரைக்குடிக்கு காரில் கொண்டு வந்த பணம் பறிமுதல் செய்தனர்

திருமணத்திற்கு நகை வாங்க கொண்டு சென்ற ரூ10 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்த பறக்கும்படையினர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கண்டனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியான வேளாண் துணை இயக்குனர் அழகுராஜா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அறந்தாங்கியில் கண்ணன் என்பவர் தனது குடும்பத்தாருடன் காரைக்குடிக்கு காரில் வந்து உள்ளார். அந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனைசெய்தபோது, அவர்களது காரில் வைத்திருந்த ரூ 10 லட்சத்து 85 ஆயிரம் இருந்தது குறித்து விசாரணை நடத்தினர். அதில், திருமணத்திற்கு நகை வாங்க எடுத்து வந்த பணம் என தெரிய வந்தது .மேலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தஅதிகாரிகள் காரைக்குடி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!