தேவகோட்டை வட்டாட்சியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்

தேவகோட்டை வட்டாட்சியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம்  புகார்
X
தேவகோட்டை வட்டாட்சியர் பெண் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

பெண் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தேவகோட்டை வட்டாட்சியர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் வருவாய்த்துறையினரிடம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வருபவர் ராஜரத்தினம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவகோட்டை வட்டாட்சியராக பொறுப்பேற்றார். இந்நிலையில், இவர் மீது தேவகோட்டை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டியிடம் புகார் மனுஅளித்துள்ளனர்

அதில் கூறியிருப்பதாவது:தேவகோட்டை வருவாய் கிராமங்களில் பணிபுரிந்து வரும் பெண் கிராம நிர்வாக அலுவலர்களிடம் இரவு நேரங்களில் செல்போனில் தேவையற்ற விஷயங்களை பேசியும், பாலியல் தொல்லை கொடுத்தும் வருகிறார். இவர் மீது விசாரணை செய்து விசாகா கமிட்டி மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பெண் ஊழியர்கள் மத்தியிலும் வருவாய்த்துறை அலுவலர்களிடையேயும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. புகார் மீது விசாரணை நடத்த தேவகோட்டை கோட்டாட்சியரு க்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business