இந்தியாவை ஒன்றியம் என்று அழைக்கும் நேரம் வந்து விட்டது: கார்த்திக் சிதம்பரம் பேட்டி

இந்தியாவை ஒன்றியம் என்று அழைக்கும் நேரம் வந்து விட்டது: கார்த்திக் சிதம்பரம் பேட்டி
X

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்

இந்தியாவை ஒன்றியம் என்று அழைக்கும் நேரம் வந்துவிட்டது. அதனால் ஒன்றியம் என சரியான முறையில் அழைக்கப்படுகிறது -காரைக்குடியில் கார்த்திக்சிதம்பரம் பேட்டி.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம். அப்போது அவர் கூறியதாவது,

நரேந்திர மோடி அரசு இருக்கும் வரை பெட்ரோல் விலை குறையாது, காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவில் இருந்து எந்த தலைவர்கள் வந்தாலும், காங்கிரஸ் கட்சி வரவேற்கும். நாலரை ஆண்டுகாலம் செயலற்று இருந்த தமிழ்நாட்டை, 60 நாட்களுக்குள் சீரமைக்க முடியாது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விரைவில் அதனை சீரமைக்கும். தமிழ்நாட்டில் தற்போது உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் திறமையானவர் மருத்துவ துறையை சிறப் பாக கையாள்வார். இந்தியாவை ஒன்றியம் என்று அழைக்கும் நேரம் வந்துவிட்டது. அதனால் ஒன்றியம் என சரியான முறையில் அழைக்கப்படுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai marketing future