காரைக்குடியில் ப சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் சலசலப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள லைலா முஸ்தபா அல்ஜிம்மா பள்ளிவாசலில் மனிதநேய மக்கள் கட்சியினர் கூட்டம் ஏற்பாடு செய்தனர். காங்கிரஸ் கட்சி காரைக்குடி சட்டமன்ற வேட்பாளர் மாங்குடி அவர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரத்தை வரவழைத்தனர்.
இஸ்லாமிய மக்களிடையே வாக்கு சேகரித்தனர். அப்போது கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் நன்றியுரை கூற கூட தங்களைஅழைக்க வில்லை என்றும் மனித நேய மக்கள் கட்சியினர் கேள்வி எழுப்பினர். காங்கிரஸ் கட்சியில் உள்ள இஸ்லாமியர்களே தங்களை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டதாகவும், மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த தங்களுக்கு மரியாதை தரவில்லை என்று கூறி ப சிதம்பரம் முன்பே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் உடனடியாக கூட்டத்திலிருந்து ப சிதம்பரம் புறப்பட்டுச் சென்றார் இதனால் அங்கு சலசலப்பு அடங்க சிறிது நேரம் ஆனது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu