அதிமுக சசிகலாவின் தலைமைக்கு விரைவில் சென்றுவிடும் -சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம் தகவல்

அதிமுக சசிகலாவின் தலைமைக்கு விரைவில் சென்றுவிடும் -சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம் தகவல்
X

கார்த்திசிதம்பரம் எம்.பி

அதிமுக சசிகலாவின் தலைமைக்கு விரைவில் சென்றுவிடும் என சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஒரு காலகட்டத்தில் ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவின் தலைமைக்கு சென்றுவிடும் என சிவகங்கை மாவட்டம் கீழச்செவல்பட்டியில் கார்த்திக் சிதம்பரம் கூறியதுடன் இது எனது அரசியல் ஆருடம் எனவும் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி யில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது ஒரு சரித்திர விபத்து என்றும்.அவரது கதை சென்ற தேர்தலுடன் முடிந்து விட்டது என்றும் கூறினார். தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு ஒரே காரணம் பிரதமர் நரேந்திர மோடி தான், தமிழ்நாட்டிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியவர், இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் தான். அதனால் இந்தியாவை ஒன்றியம் என்று அழைப்பதில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!