ஆட்சியாளர்கள் மனிதநேயத்தை கடைப்பிடிக்க வேண்டும் - அமைச்சர் பேச்சு
ஆட்சியாளர்கள் மனிதநேயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும், அதே சமயத்தில் சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும் என காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் ஊரகத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2000 ரூபாய் உதவி தொகையை வழங்கி ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் பேசும் போது ஆட்சியாளர்கள் மனிதநேயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும், அதே சமயத்தில் சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும்.அதற்கு எடுத்துக்காட்டாக நமது முதல்வர் மு.க. ஸ்டாலின்.திகழ்கிறார்.
மேலும் ஒரு வார காலத்திற்குள் மக்களின் தேவையறிந்து விரைந்து செயல்பட கூடிய அரசு, இந்திய துணைக்கண்டத்திலேயே திமுக அரசுதான் என நடுநிலையாளர்களே பாராட்டுவதாக தெரிவித்த அமைச்சர், சொன்னதை செய்வோம். சொல்லாததையும் செய்வோம் என்று ஆட்சி செய்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றும் புகழாரம் சூட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu