சொந்த செலவில் அரசு ஆரம்பப் பள்ளியை வண்ணமயமாக்கிய தலைமை ஆசிரியர்

சொந்த செலவில் அரசு ஆரம்பப் பள்ளியை வண்ணமயமாக்கிய தலைமை ஆசிரியர்
X

சிவகங்கை மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் பள்ளி மராமத்து பணிகளை செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் சொந்த செலவில், பள்ளி மராமத்து பணிகளை செய்து அசத்தியுள்ளார். இவருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர் அரசு ஆரம்பப் பள்ளியில் ரமேஷ் குமார் 15 வருடமாக தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 70 மாணவர்கள் படித்து வருகின்றனர் .


இவர் வருடந்தோறும் சுமார் 10,000 ரூபாய் தனது சொந்தப் பணத்தில் பள்ளிக்கு செலவு செய்வர். தற்போது பள்ளி கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது இதனால் தனது சொந்த செலவில் ரூபாய் 70 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து சேதமடைந்த கட்டிடங்களை பராமரித்து வேலை பார்த்து வண்ணம் அடித்து கொடுத்துள்ளார்.


மேலும் இவர் பதவியேற்ற முதல் இன்று வரை ஒவ்வொரு வருடத்திற்கு மாணவர்கள் சேர்க்கை விதமும் அதிகரித்துள்ளது. இவரது செயலுக்கு கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!