ரஜினியின் முடிவு குறித்து கருத்து தெரிவிப்பது முறையல்ல டிஆர் பாலு

ரஜினியின் முடிவு குறித்து கருத்து தெரிவிப்பது முறையல்ல டிஆர் பாலு
X

ரஜினிகாந்த எங்களுக்கு மிக நெருங்கிய நண்பர் அவருடைய தனிப்பட்ட முடிவு குறித்து கருத்து தெரிவிப்பது முறையல்ல என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேட்டியின் போது கூறினார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் திமுக தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ரஜினிகாந்த எனக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் மிக நெருங்கிய நண்பர். அவருடைய தனிப்பட்ட முடிவு குறித்து கருத்து தெரிவிப்பது முறையல்ல என்றார்.அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என பொதுமக்கள் பேசுகிறார்கள். அதைவைத்து நாம் கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!