சிவகங்கை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் சொர்க்கவாசல் திறப்பு
சிவகங்கை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
சிவகங்கையிலுள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு வைபவம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி திருநாளையொட்டி சுவாமி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் இரு தேவியருடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டதும் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்சி அளித்ததை பின்பு சுவாமிக்கும் நம்மாழ்வாருக்கும் பஞ்சமுக கற்பூர ஆராதனை காட்டப்பட்டது இதனைத் தொடர்ந்து நம்மாழ்வார் முன்செல்ல எம்பெருமாள் கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் கோரண நோய் பரவல் காரணமாக 50 பேர் மட்டும் கோவிலுள் அனுமதிக்கப்பட்டனர் ஏராளமான பக்தர்கள் கோவில் வெளியில் நின்று சுவாமியை வழிபட்டனர் சொர்க்கவாசல் திறப்பு முடிந்ததும் பக்தர்கள் வரிசையில் நின்று மூலவர் மற்றும் உற்சவர் சுவாமியை வழிபட்டு சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu