தங்களின் ஊழலை மறைக்கவே அரசை குறை கூறுகிறது திமுக : கதர்துறை அமைச்சர் பாஸ்கரன்

தங்களின் ஊழலை மறைக்கவே அரசை குறை கூறுகிறது திமுக : கதர்துறை அமைச்சர் பாஸ்கரன்
X

திமுகவினர் தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே எங்கள் ஆட்சி மீது ஊழல் குற்றம் சாட்டிவருகின்றனர் என கதர்துறை அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

சிவகங்கையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கதர்துறை அமைச்சர் பாஸ்கரன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது, தாங்கள் செய்த ஊழல்களை மறைக்கவே திமுகவினர் எங்கள் ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர் என்றார். மேலும் எதுவும் செயல்படவில்லை என கூறுவதும் திமுகவினர் தாங்கள் செய்த ஊழல்களை மறைக்கவே ஆளும்கட்சி செய்கிற நல்ல திட்டங்களை குறை சொல்வதேயே வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்றார்.

தமிழகத்தில் தொழிற்சாலைகள் வராதது குறித்த ஸ்டாலின் கருத்திற்கு பதிலளித்த அமைச்சர் இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் துவங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்வது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் ஸ்டாலின் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்பதற்காகவே குற்றம் சுமத்தி பேசிவருகிறார் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!