ஒரு தமிழச்சி 2 மாநில ஆளுனராக இருக்க கூடாதா? தமிழிசை வேதனை கேள்வி

ஒரு தமிழச்சி 2 மாநில ஆளுனராக இருக்க கூடாதா? தமிழிசை வேதனை கேள்வி
X

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஒரு தமிழச்சி 2 மாநில ஆளுனராக இருக்க கூடாதா? என தமிழிசை சவுந்தரராஜன் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பாராதியார் நூற்றாண்டு பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் "இரண்டு மாநிலத்தில் அவள் ஆளுநராக இருக்கிறாள்'' என்று ஒருமையில் பேசியிருக்கிறார்.

இரண்டு மாநிலத்தில் ஒரு பெண் ஆளுநராக இருப்பது எவ்வளவு சிரமம், ஒரு தமிழச்சி இரண்டு மாநிலங்களை ஆண்டு கொண்டு இருப்பதை எண்ணி ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். எனவே ஒருவரை திட்டும் போது கூட மரியாதையோடு திட்டுங்கள். ஏனென்றால் தமிழுக்கு மரியாதை உண்டு, தமிழக்கு மரியாதை இல்லையென்றால் நீங்கள் தமிழர்களே இல்லை எனவும் என தமிழிசை செளந்தரராஜன் வேதனையுடன் பேசினார்.

Tags

Next Story