உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையை நிர்வகிக்க உள்ள ஷில்பா ஐஏஎஸ்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையை  நிர்வகிக்க உள்ள ஷில்பா ஐஏஎஸ்
X
தன் பெண் குழந்தையை அங்கன்வாடி பள்ளியில் சேர்த்து பெயர் பெற்ற முன்னாள் திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் IAS

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற பெயரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி இருக்கும் புதிய துறையை திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் ஷில்பா நிர்வகிக்க உள்ளார்.

ஷில்பா கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்து, அங்கு சட்டம் படித்தவர். யுபிஎஸ்சி தேர்வில் 46வது இடத்தை அகில இந்திய அளவில் பிடித்து தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2010ல் திருச்சியின் உதவி ஆட்சியராக இருந்தார். பின்னர் 2014ல் திருப்பத்தூர் சப் டிவிஷனின் துணை ஆட்சியராக இருந்தார். அதை தொடர்ந்து சென்னை கார்பரேஷனில் கல்வித்துறையின் துணை கமிஷனராக தேர்வானார்.

பின்னர் கைத்தொழில் துறை வழிகாட்டல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகத்தின் நிர்வாக துணைத் தலைவரானார்.

2018ல் திருநெல்வேலி ஆட்சியராக ஷில்பா அறிவிக்கப்பட்டார். திருநெல்வேலி ஆட்சியராக அங்கு கந்து வட்டிக்கு எதிராக இவர் செயல்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. அதோடு தனது மகள் கீதாவை அங்கு இருக்கும் பாளையங்கோட்டை அங்கன்வாடி பள்ளியில் சேர்த்து முன்னுதாரணமாக திகழ்ந்தார். கலெக்டர் மகள் என்றெல்லாம் பார்க்காமல், அங்கன்வாடி பள்ளிக்கு தனது மகளை அனுப்பி வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதையடுத்து தற்போது உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தை செயல்படுத்த போகும் முக்கியமான பொறுப்பு ஷில்பாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!