பாலியல் வழக்கு: தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.க்கு 3 ஆண்டு சிறை தண்டனை

பாலியல் வழக்கு: தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.க்கு 3 ஆண்டு சிறை தண்டனை
X

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மாவட்ட குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ்தாஸ். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021 பிப்ரவரி 21-ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது அவரது பாதுகாப்புக்கு பணிகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெரம்பலூரில் பணியாற்றி வந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் காரில் அழைத்து சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதையை டி.ஜி.பி. திரிபாதிக்கு புகார் அளித்தார்.இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த புகாரின் அடிப்படியில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

இவர் மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை தொடர்ந்து ராஜேஷ் தாஸ் ஜாமீ மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை இன்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது குற்றவாளி ராஜேஷ் தாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக வரும் 17-ம் தேதி வரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 30 நாள் கெடுவுக்குள் மேல்முறையீடு செய்து அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!