/* */

செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
X
போலீஸ் காவலில் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 30வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி, பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்க துறையினர் கைது செய்த போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ மனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப் பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 28 அதாவது இன்று வரை நீட்டித்து ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.

இதனால் புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் நான்காம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார். இதன்மூலம் 30 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் இன்னும் 3 வாரங்களில் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் இடையே நிலவி வருகிறது. ஆனால், மீண்டும் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 March 2024 3:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!