செந்துறை வட்டாட்சியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது நீதிமன்றம்
பைல் படம்.
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவில் உள்ள சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேலு. இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செந்துறை வட்டத்தில் மணப்பத்தூர், கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தின் புலப்படத்தின் நகல் தமக்கு அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி செந்துறை வட்டாட்சியருக்கு மனு அனுப்பி உள்ளார். அதற்கான கட்டண தொகை 40 ரூபாய் பணமும் செலுத்தியுள்ளார். ஆறு மாதங்கள் வரை அதற்கான புலப்பட நகல் உட்பட எதுவும் சிங்காரவேலுக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்படவில்லை.
சிங்காரவேலு இதுகுறித்து அரியலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இவ்வழக்கை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை செய்து தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், வட்டாட்சியரின் சேவையில் குறைபாடு உள்ளது என்று தெரிவித்து வட்டாட்சியருக்கு ரூ.25,000 அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu