சீமான் பாலியல் குற்றவாளி; அவருக்கு அருகதை இல்லை - ஜோதிமணி எம்.பி.,

சீமான் பாலியல் குற்றவாளி; அவருக்கு அருகதை இல்லை - ஜோதிமணி எம்.பி.,
X

பைல் படம்.

சீமான் ஒரு பாலியல் குற்றவாளி, ராஜீவ்காந்தியை விமர்சிக்க அவருக்கு அருகதை இல்லை என ஜோதிமணி எம்.பி., தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த 18ம் தேதி விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து திமுக, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என தெரிவித்திருந்தார்.

இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜீவ்காந்தி என்ன பெரிய தியாகியா? ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ராணுவத்தை அனுப்பி ஒரு இனத்தையே அழித்தது என பல விஷயத்தை செய்துள்ளார் ராஜீவ்காந்தி என ஆவேசத்துடன் பேசினார்.


சீமானின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தனது டுவிட்டர் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், சீமான் ஒரு பாலியல் குற்றவாளி எனவும், சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் தற்போது சிறையில்தான் இருந்திருக்க வேண்டும். இந்தியாவின் இளைய பிரதமர், தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன், தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை அவருக்கெல்லாம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!