கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்
X

காட்சி படம் 

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

தமிழகத்தில் நேற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கிய பொதுத்தேர்வு, மே 28 ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு முடிந்த பிறகு விடுமுறை அளிக்கப்பட்டுவிடும்..

ஆனால் தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எப்போது விழுமுறை அளிக்கப்படும் என்கிற கேள்வி எழுந்து வந்தது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

விடுமுறைக்குப் பின் ஜூன் 13-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 23-ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும் , 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story