தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு
School Reopen Date Tamil Nadu
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
ஆனால் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் மே மாதத்தில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மாறாக அதற்கு பிறகுதான் வெயில் அதிகமாக கொளுத்த தொடங்கியது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. சென்னையில் 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. எனவே பள்ளிகள் திறப்பை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
ஆனாலும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்தது. எனவே பள்ளிகள் திறக்கப்படுவதை மேலும் தள்ளி வைக்குமாறு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து முதலமைச்சர்.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகள் திறக்கப்படுவது 2-வது முறையாக மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் 2023-2024-ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு 12-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (12-ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu