/* */

ஜூன் 20-ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஜூன் 20-ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு
X

நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலந்து கொண்டு பேசினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 20ம் தேதி திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது ஒரு வாரம் முன்னதாகவோ பின்னராகவோ இருக்கலாம்.

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு 38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 10 ஆயிரத்து 300 க்கு மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கழிவறை உட்பட 18 ஆயிரம் கட்டிடங்கள் கட்டப்படும்.

கொரோனா காலத்துக்கு பின்னர் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சம் உயர்ந்து, தற்போது 53 லட்சமாக உள்ளது. ஆசிரியர்கள் தேவைப்படும் இடத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறினார்

Updated On: 18 May 2022 1:40 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  2. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  5. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  6. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  9. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  10. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...