நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி - 2 பேர் காயம்

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி - 2 பேர் காயம்
X
நெல்லையில் தனியார் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

நெல்லையில், தனியார் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பலியான இரு மாணவர்கள், 8ம் வகுப்பு படித்து வந்த சஞ்சய், விஸ்வரஞ்சன் என்று தெரிய வந்துள்ளது.

திருநெல்வேலி டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில், இந்த விபத்து நேரிட்டது. படுகாயமடைந்த மாணவர்கள் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தால், பள்ளி வளாகத்தில் பதற்றம் நிலவியது. பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து, குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றனர். மாணவர்கள் மூவர் இறந்த செய்தி கேட்டதும், சக மாணவர்கள் சிலர் ஆவேசமடைந்து, பள்ளியில் பொருட்களை சேதப்படுத்தினர். அத்துடன், சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!