தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை? அறிவிப்பு இதோ

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை? அறிவிப்பு இதோ
X

கோப்பு படம்

மழையால், தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மழை தொடரும் நிலையில், பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி விடுமுறை

புதுக்கோட்டை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சிவகங்கை, கரூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!