தமிழகத்தில் தொடரும் மழை: இன்று எங்கெல்லாம் பள்ளி விடுமுறை?

தமிழகத்தில் தொடரும் மழை: இன்று எங்கெல்லாம் பள்ளி விடுமுறை?
X
கோப்பு படம்
கனமழை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இதுவரை 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று (சனிக்கிழமை) 12 மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக, பல மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக, ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

இதேபோல், நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி மா நிலம் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!