சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை பள்ளி விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை பள்ளி விடுமுறை
X
மழை தொடரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை சற்று குறைந்தாலும், மழையின் பாதிப்புகள் இன்னமும் தீர்ந்தபாடில்லை. பல இடங்களை வெள்ளநீர் சூழ்ந்து இன்னும் வடியவில்லை. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!