மதுரையில் இன்று தொண்டர்களை சந்திக்கிறார் சசிகலா

மதுரையில் இன்று தொண்டர்களை சந்திக்கிறார் சசிகலா
X

சசிகலா நடராஜன்

மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், மருதுசகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவிக்கும் சசிகலா, அதனைத் தொடர்ந்து தொண்டர்களை சந்திகிறார்

தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த சசிகலா முதற்கட்ட பயணமாக தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று தஞ்சாவூரில் டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற அவர், இன்று மதுரைக்கு செல்கிறார். கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், வண்டியூர் தெப்பக்குளம் அருகேயுள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவிக்கிறார்.

அதனை தொடர்ந்து கோரிப்பாளையம் பகுதியில் சசிசலா தொண்டர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை பசும்பொன்னில் தேவர் குருபூஜையில் பங்கேற்க திட்டமிட்டுள்ள சசிகலா, ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா