நினைத்தது நடக்க அகஸ்தியர் பாத பீடத்தில் சசிகலா தியானம்

நினைத்தது நடக்க அகஸ்தியர் பாத பீடத்தில் சசிகலா தியானம்
X

அகத்தியர் பீடத்தின் முன்பு அமர்ந்து தியானத்தில் ஈடுபட்ட சசிகலா.

தென்காசி மாவட்டத்திற்கு சுற்றுபயணம் வந்த சசிகலா அகஸ்தியர் பாத பீடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.

தென் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது கோயில்களில் சுவாமி தரிசனமும் செய்தும், தொண்டர்களை சந்தித்து பேசியும் வருகிறார்.

அந்தவகையில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த சசிகலாவிற்கு அவரது ஆதரவாளர்கள் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இலஞ்சி குமார சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து குமார சுவாமி கோயிலுக்கு அருகே உள்ள அகஸ்தியர் பாத பீடத்தில் வழிபாடு செய்தார்.

அப்போது தாங்கள் நினைத்த காரியங்கள் வெற்றி பெற அகஸ்தியரை வழிபடுவதுடன் தியானம் மேற்கொண்டால் வெற்றி கிட்டும் என அங்குள்ளவர்கள் கூறுகையில், சசிகலா ஐந்து நிமிடம் அகத்தியர் பீடத்தின் முன்பு அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா