சார்பட்டா பரம்பரை என்பது யாரை குறிப்பிடுகிறது என தெரியுமா?

சார்பட்டா பரம்பரை என்பது யாரை குறிப்பிடுகிறது என தெரியுமா?
X
Sarpatta Parambarai History in Tamil-சார்பட்டா பெயருக்கான பொருளை அறிய பலரும் முற்பட்டாலும் அதற்கான சரியான விளக்கத்தை கண்டடைய முடியவில்லை.

Sarpatta Parambarai History in Tamil

1930களில் வடசென்னை மக்களின் வாழ்வியலோடு கலந்திருந்தது குத்துச்சண்டை. தற்போதும் குத்துச்சண்டை மீது வடசென்னை மக்களுக்கு காதல் அதிகம். மெட்ராஸ் குத்துக்சண்டை களத்தில் கோலோச்சிய சார்பட்டா பரம்பரையில் பல சமுதாயத்தை சார்ந்த வீரர்கள் இருந்தாலும் வீழ்த்த முடியாத வீரர்களாக நீண்டகாலம் களத்தில் நின்றவர்கள் பெரும்பாலும் மீனவர்கள் தான். சார்பட்டா பரம்பரையின் மையம் இராயபுரம், பனைமரத்தொட்டி பகுதிதான். இன்றும் சென்னை பாக்சிங் வட்டாரத்தில் சார்பட்டா என்றால் அது மீனவர் குத்துசண்டை என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று.

மெட்ராஸ் பாக்சர்களில் பலருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியர் ஆங்கிலோ இந்திய வீரரான நாட்டெர்ரி. ஸ்டைல், கால் அசைவு , நுணுக்கமான சண்டைக்கு பெயர் பெற்றவர் டெர்ரி. ஆங்கிலோ இந்தியன் வீரரான டெர்ரியை முதன்முதலில் வீழ்த்தியவர் கித்தேரி முத்து எனும் மீனவர். முத்துவின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி ஆல்பர்ட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் "திராவிட வீரன்" என்ற பட்டத்தை தந்தை பெரியார் அவருக்கு சூட்டினார். அண்ணா கித்தேரி முத்துவை வாழ்த்தி பேசினார். சார்பட்டா பரம்பரையில் அதிக புகழ்பெற்றவராக கித்தேரி முத்து இருந்தார்.

கித்தேரிமுத்துவுக்கு பிறகு மீண்டும் டெரியை வீழத்தியது ஜென்டில்மேன் பாக்ஸர் என்று பெயர் பெற்ற "டாமிகன்" சுந்தர்ராஜன் அவர்கள். அவரது சந்ததியினர் இப்போதும் ராயபுரம் பகுதியில் குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகின்றனர்.

அதே போன்று கித்தேரி முத்து அவர்களின் மகன்கள் அன்புமுத்து, அருமைமுத்து ஆகியோர் காசிமேடு ஜிவா நகர் பகுதியில் பாக்சிங் கிளப் வைத்திருந்தனர். சார்பட்டா பரம்பரையில் புகழ்பெற்ற மற்றொரு பாக்சர் ஆறுமுகம் அவர்கள். தான் பங்கேற்ற 120 போட்டிகளில் 100 போட்டிகளில் நாக்அவுட் செய்து சாதனை படைத்தவர். இவரை தொடர்ந்து பாக்சர் வடிவேல், செல்வராஜ் என சார்பட்டா பரம்பரையில் பங்களிப்பு செலுத்திய மீனவர்களின் பட்டியல் மிக நீளம்.

உலககுத்து சன்டை வீரர் முகமது அலி சென்னை வந்தபோது நேரு ஸ்டேடியத்தில் நடந்த காட்சி போட்டியில் அவருடன் மேடை ஏறி சண்டையிட்டவரும் பனைமரதொட்டியை சார்ந்த பாக்ஸர் பாபு என்ற மீனவர் தான்.

மீனவர்களை தவிர்த்து பிற சமுதாயத்தினரும் சார்பட்டா பரம்பரையில் பங்களித்துள்ளனர். அதில் முக்கியமானவர் அருணாச்சலம், மாசி, ஜெயவேல் போன்ற பலரும் பங்களிப்பு செலுத்தியுள்ளனர். சார்பட்டா பரம்பரையிலேயே டான்சிங் ஏழுமலை என்ற தரமான பாக்ஸர் இருந்துள்ளார். இப்போதும் ராயபுரம், சென்னை துறைமுகம் சுற்றியுள்ள பகுதி சேர்ந்த பெரியவர்கள் பலரும் பாக்சர் அருணாச்சலம் அவர்களை பற்றி பேச கேட்கலாம்.

நாட்டெர்ரியுடன் நடந்த போட்டியில் மேடையிலேயே அருணாச்சலம் அவர்கள் உயிரிழந்தார். அவரது வீர மரணத்திற்கு இரண்டு மாதங்கள் கழித்து டெரியை கித்தேரி முத்து வீழ்த்தினார். இந்த போட்டிக்கு பிறகுதான் கித்தேரி முத்து மிக பிரபலம் அடைந்தார்.

சென்னையில் பிரபலமாக இருந்த இந்த பாக்ஸிங், சில சிக்கல்களையும் ஏற்படுத்தின. இதில் கைதேர்ந்தவர்களில் சிலர், ரவுடியிசத்திலும் ஈடுபட்டனர்; அதுவே இந்த விளையாட்டுக்கு எமனாகவும் மாறியது இதுதவிர, போட்டிகளில் தோற்ற அணியினர் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வன்முறையில் இறங்கியதாகவும் சொல்லப்படுகிறது.இத்தகைய காரணங்களால், 1989ஆம் ஆண்டு இந்த ஆட்டத்தை நடத்த, அரசு தடை விதித்தது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
Weight Loss Tips In Tamil