ஏற்காடு பகுதியில், ரூ. 10.75 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்; கலெக்டர் ஆய்வு

ஏற்காடு பகுதியில், ரூ. 10.75 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
X

Salem News,Salem News Today - ஏற்காடு பகுதியில் நடந்துவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.

Salem News,Salem News Today-ஏற்காட்டில் ரூ.10.75 கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Salem News,Salem News Today- ஏற்காடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கார்மேகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒதுக்கப்பட்ட நிதி மதிப்பில் செய்யப்படும் திட்டப் பணிகள், அதற்கான மதிப்பீடு, அதற்கான செலவினங்கள், நடந்துவரும் பணிகளின் நிலை எந்த அளவில் உள்ளது என்பதை, கலெக்டரில் நேரில் ஆய்வு செய்த போது விசாரணை நடத்தினார். பணிகளின் தரத்தை பார்வையிட்டார். மேலும், விரைவில் பணிகளை முடிக்கவும் அவர், துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கு பின், கலெக்டர் கார்மேகம் கூறியதாவது,

மலைவாழ் மக்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், கொட்டச்சேடு முதல் கே.நார்த்தஞ்சேடு வரை 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.26 லட்சம் செலவிலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் செலவிலும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பிலும், பொது நிதியின் கீழ் ரூ.2 கோடியே 36 லட்சம் செலவிலும், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பிலும் என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

மேலும், பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் செலவில் 3 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் 10 பணிகளும், கிராமப்புற நூலகங்கள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில், 3 பணிகளும் நடக்கிறது. புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 55 லட்சத்தில் 5 பணிகளும் உள்பட இந்த நிதியாண்டில் ஏற்காட்டை மேம்படுத்தும் வகையில் ரூ.10.75 கோடியில் 222 வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

இந்த ஆய்வின்போது ஏற்காடு தாசில்தார் தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணக்குமார், உதவி பொறியாளர் சதீஷ் உள்பட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!