ஏற்காட்டில் தொடர் மழை: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஏற்காட்டில் தொடர் மழை: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

ஏற்காடு மலைப்பகுதியில் நிலவிய பனி மூட்டம்.

ஏற்காட்டில் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

ஏற்காட்டில் தொடர் மழை: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புசேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

ஏற்காட்டில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால், ஏற்காட்டில் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் உள்ளூர்வாசிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இடை இடையே பனிமூட்டமும் அதிகளவில் காணப்படுகிறது.

இதனால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்தபடி செல்கின்றன. இதனிடையே காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் அதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஏற்காட்டில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளன.

இதனால் ஏற்காடு முழுவதும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பல முறை மின்விநியோகம் தடைபட்டது. இதனை சீர் செய்யும் பணியில் மின்வாரிய தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மழை மற்றும் பனிக்காற்றின் காரணமாக ஏற்காட்டில் காபி விவசாய தொழில் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டது.

அதேபோல் கடும் குளிரின் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது. இதனால், ஏற்காட்டில் உள்ள பூங்காக்கள், பல்வேறு காட்சி முனைகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடும் குளிரால் பொதுமக்கள் 2-வது நாளாக வீடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!