ஏற்காடு மலைப்பாதையில் திடீர் என தீப்பிடித்து எரிந்த கார்
தீ பிடித்து எரிந்த கார் (கோப்பு படம்)
ஏற்காடு மலைப் பாதையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுவது சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பிரதேசம் ஆகும். தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் ஆகிய கோடை சுற்றுலா தளங்களுக்கு அடுத்தபடியாக சிறப்பு பெற்ற ஒரு கோடை வாசஸ்தலமாக ஏற்காடு உள்ளது. அதனால் தான் இதனை ஏழைகளின் ஏற்காடு ஊட்டி என்று அழைக்கிறார்கள்.
தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் சுற்றுலா பயணிகள் பலரும் ஏற்காடு மலை நோக்கி சுற்றுலாவுக்கு தயாராகி சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள். இதன் காரணமாக ஏற்காடு மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்படுவது உண்டு.
இந்த நிலையில் இன்று காலை ஏற்காடு மலைப்பாதையின் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் உடனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
திடீரென எரிந்த காரின் உரிமையாளர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கபிலேஷ் என்பவர் ஆவார். இவர் தனது குடும்பத்தினருடன் ஏற்காடு மலைக்கு சுற்றுலா சென்ற போது தான் கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ பிடித்ததை கண்டதால் உடனடியாக கபிலேஷ் குடும்பத்துடன் கீழே இறங்கிவிட்டார். இல்லையென்றால் உயிர் பலி சேதம் ஏற்பட்டிருக்கும். தீபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை வருகிறார்கள்.
கார் தீப்பிடித்து எரிந்ததால் ஏற்காடு மலைப்பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu