சேலம் வந்தடைந்த 7வது ஹீரோ - ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கு வரவேற்பு

சேலம் வந்தடைந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையினை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வரவேற்றார்.
சேலம் வந்தடைந்த 7வது ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையினை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வரவேற்றார்கள். இந்நிகழ்ச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது:
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஆண்டு சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வெற்றிகரமாக நடத்தி முதல்வர் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்கள். அந்தவகையில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் சென்னையில் வருகின்ற 03.08.2023 முதல் 12.08.2023 வரை 7வது ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கிக் கோப்பை நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கான வெற்றிக்கோப்பையினை கடந்த 21.07.2023 அன்று ஆசிய சாம்பியன்ஸ் கன்னியாகுமரியில் தொடங்கி, சென்னை வரை எடுத்துச் சென்று இப்போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், சேலம் மாவட்டத்திற்கு வந்தடைந்த 7வது ஹீரோ ஹாக்கிக் கோப்பையினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட விளையாட்டு அலுவலர் , மாவட்ட ஹாக்கி சங்கத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்களைக் கொண்டு வெகு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இக்கோப்பையானது தொடர்ந்து, விழுப்புரம் வழியாக சென்னை சென்றடைந்து வருகின்ற 01.08.2023 அன்று முதல்வர் அவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இளைஞர்கள் கல்வி மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் பல்வேறு சாதனைகளைப் புரிந்திட தமிழ்நாடு அரசால் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன், மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் இராபர்ட், செயலாளர் வெங்கடேசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu