களைகட்டும் சந்தைகள்.. ஒரே நாளில் ரூ.4. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

களைகட்டும் சந்தைகள்.. ஒரே நாளில் ரூ.4. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
X

கோப்புப்படம்

Salem News Today- சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகள் களைகட்டியுள்ளன.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள, கொங்கணாபுரத்தில், நேற்று சனிக்கிழமை வார சந்தை கூடியது. இந்த சந்தையில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர். திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தன. சந்தை நடைபெற்ற ஒரே நாளில் ரூ.4. 5 கோடி அளவிற்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த 5 ஆயிரத்து 750 பருத்தி மூட்டைகள் 1, 250 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, கூட்டுறவு துறை அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 6 ஆயிரத்து 600 முதல் ரூ. 8 ஆயிரத்து 700 வரை விற்பனையானது. டி. சி. எச். ரக பருத்தி குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 600 முதல் ரூ. 8 ஆயிரத்து 350 வரை விற்பனையானது. கொட்டு ரக பருத்தி குவிண்டால் ரூ. 3 ஆயிரத்து 600 முதல் ரூ. 5 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. 5 ஆயிரத்து 750 பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ. 1 கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் போனது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்