சேலம் கோட்டை அழகிரிநாதர் திருக்கோயிலில் பரமபத வாசல் திறப்பு
கோட்டை அழகிரி நாதர் திருக்கோவில் சொர்க்க வாசல்
இந்துகளின் விரத வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வைகுந்த ஏகாதசி, இந்த வைகுந்த ஏகாதசி வைபவம் சனிக்கிழமை அனைத்து பெருமாள் திருக்கோயில்களிலும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது
அதேபோன்று,சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் சனிக்கிழமை வைகுந்த ஏகாதசி வைபவம் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மிகவும் பழமையானதும் வரலாற்று சிறப்புமிக்க கோயிலுமான அருள்மிகு கோட்டை அழகிரி நாதர் திருக்கோவில். வைகுந்த ஏகாதசி வைபவம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அதிகாலை நான்கு மணியளவில் உற்சவ மூர்த்தியான பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கக் கவசம் ரத்னகிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்தனர்.
பின்னர் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பல்லக்கில் பவனி வந்தனர் இதனை தொடர்ந்து பெருமாளும் தாயாரும் திருக்கோயிலை சுற்றி வலம் வந்தபின் பெருமாளுக்கும் தாயருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இது குறித்து கோவில்பட்டாசாரியார் கூறுகையில், விரதத்தில் மிக முக்கிய விரதம் வைகுந்த ஏகாதசி விரதம். இந்த நாளில் விரதம் இருந்தால் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது ஐதீகம் எனவும், இந்த நாளில் பெருமாளை தரிசிப்பது குடும்பத்திற்கு மிகவும் சிறந்தது என தெரிவித்தார்.
மேலும் இந்த வைகுந்த ஏகாதசி திருநாளில் ஆண்டவனை தரிசனம் செய்தால் எல்லாவித நன்மைகளும் பெற்று குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்றும் சகல ஜஸ்வர்யங்களும் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இதே போல சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பரமபதவாசல் திறக்கும் வைபவம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu