பரமத்தியத்தில் திருநர் தின விழா

பரமத்தியத்தில் திருநர் தின விழா
X
பரமத்தியத்தில் திருநங்கைகள் வாழ்வாதாரம் முக்கிய அம்சம், திருநர் தின விழாவில் உரையாடல்

திருநர் தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது

திருநங்கைகள் சார்பில் அகில உலக திருநங்கைகள் மற்றும் திருநர் தின விழா கொண்டாட்டம் பரமத்தியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சிலுவை கன்னியர் திருச்சி மாகாண தலைவி லூர்து அடைக்கலசாமி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட திருநங்கைகளின் தலைவி அருணா நாயக், தொண்டு நிறுவனர் அல்போன்ஸ் ராஜ், சாக்சீடு தொண்டு நிறுவன இயக்குனர் பரிமளா சேவியர் உட்பட 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கான அரசு சலுகைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பங்கேற்றவர்கள் தங்களது நிலைகள் மற்றும் சவால்கள் குறித்து பேசியதுடன், தங்களது உரிமைகளுக்காகவும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தனர்.

Tags

Next Story