சேலம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி

சேலம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி
X
சேலம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி வழங்கப்படவுள்ளன.

சேலம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது :

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி (CNC Operator-Turning Vertical Centre) NTTF நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் 15 நாட்கள் ஆகும். மேலும் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் (SSC and NSDC Approval Certificate) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரை பெறலாம். மேலும் புகழ் பெற்ற தனியார் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, சீலநாயக்கன்பட்டி, சேலம் அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!