பழங்குடியினர் சாதிச்சான்று வழங்குதல் தொடர்பான பயிற்சி, ஆலோசனைக் கூட்டம்
பழங்குடியினர் சாதிச்சான்று வழங்குதல் தொடர்பான பயிற்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பழங்குடியினர் சாதிச்சான்று வழங்குதல் தொடர்பான பயிற்சி குறித்து சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சார் ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்று வழங்குதல் தொடர்பான பயிற்சி குறித்த மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசால் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழங்குயினர் சான்று வழங்குவதில் கால தாமதம் ஏற்படாமல் உடனடியாக பரிசீலித்து வழங்கிடும் வகையில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சார் ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்று வழங்குதல் தொடர்பான பயிற்சி குறித்த மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இக்கூட்டத்தில், சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்து சார் ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட SC/ST விஜிலென்ஸ் காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்குவது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
மாநில மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையின் படி, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் சார் ஆட்சியர்களுக்கு உட்பட்ட பகுதியில் பழங்குடியின மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றுகளை விரைந்து வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாழ்வியல் மானுடவியல் ஆவணங்கள் அடிப்படையில் ஆய்வு செய்து பழங்குடியினர் சாதிச்சான்றுகள் வழங்குவதன் மூலம், தவறான நபர்கள் பழங்குடியினர் சாதிச்சான்று பெறாமல் தடுக்கப்படும்.
வருவாய் கோட்டாட்சியர்கள், பழங்குடியினர் சாதிச்சான்று வழங்குவதற்கு முன் மானுடவியலாளர்களின் கருத்துகளைக் கேட்டு, பிறகு சாதிச்சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் மக்களை பகுதி வாரியாக கணக்கெடுப்பதன் மூலம் உண்மை பழங்குடியினர்களை வரையறை செய்ய முடியும். 5 வயது சிறுவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை தகுதி இருப்பின் அனைவருக்கும் சாதிச்சான்று வழங்கிட உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் இராஜேந்திரன், சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த சார் ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட SC/ST விஜிலென்ஸ் காவல் துணை கண்காணிப்பாளர்கள், மானுடவியலாளர்கள் அமுதவள்ளுவன் மற்றும் பிரசாத் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu