சேலம் மாவட்டத்தில் 15ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்

சேலம் மாவட்டத்தில்   15ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
X

பைல் படம்

சேலம் மாவட்டத்தில் மேம்பாலப் பணிகள் காரணமாக வரும் 15ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மல்லியக்கரை – ஆத்துார் சாலையில் இரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட கோட்டப் பொறியாளர் (நெ) நடராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்டம், மல்லியக்கரை - ஆத்தூர் சாலையில் இரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் அருகில் உள்ள இரயில்வே கீழ்பாலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சேலம் மாவட்டம், மல்லியக்கரை - ஆத்துார் சாலையில் (SH-30) கி.மீ 90/4 ல் இரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் வரும் 15ம் தேதி முதல் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் அருகில் உள்ள (Steel Mill Road) இரயில்வே கீழ்பாலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும். இராசிபுரம்-ஆத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் வாழப்பாடி வழியாகவும் (வாழப்பாடி- திம்மநாயக்கன்பட்டி சாலை), தம்மம்பட்டி- ஆத்துார் செல்லும் கனரக வாகனங்கள் தம்மம்பட்டி கெங்கவல்லி சாலையை பயன்படுத்தி மஞ்சினி வழியாக ஆத்தூர் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், மல்லியக்கரை - ஆத்துார் சாலையில் இரயில்வே மேம்பால பணிகள் முடியும் வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட கோட்டப் பொறியாளர் (நெ) நடராஜன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி