சுற்றுலா சார்ந்த நிறுவனங்கள் ஆன்லைனில் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தல்

சுற்றுலா சார்ந்த நிறுவனங்கள் ஆன்லைனில் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தல்
X

மாவட்ட ஆட்சியர்  கார்மேகம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சார்ந்த நிறுவனங்கள் தங்களது தொழில்களை ஆன்லைனில் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சார்ந்த நிறுவனங்கள் தங்களது தொழில்களை சுற்றுலா இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சுற்றுலா சார்ந்த நிறுவனங்கள் தங்களது தொழில்களை சுற்றுலா இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் சாகச சுற்றுலா இயக்குபவர்கள் (Adventure Tourism), கேம்பிங் இயக்குபவர்கள் (Camping operators), கேரவன் மூலம் சுற்றுலா, பூங்கா இயக்குபவர்கள் (Caravan Tour operators / Caravan park operators) மற்றும் பெட் அண்ட் பிரேக் ஃபாஸ்ட் திட்டம் / ஹோம் ஸ்டே (Bed and Break Fast Establishments) உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த நிறுவனங்களை நடத்துபவர்கள் அனைவரும் www.tntourismtors.com என்ற இணையதளத்தின் மூலம் அவசியம் உடனடியாக பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு முறையாக பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் இருப்பின் அதன்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் சுற்றுலா சார்ந்த நிறுவனங்கள் தங்களது தொழில்களை பதிவு செய்வது குறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை நேரிலோ அல்லது 89398 96397, 0427-2416449 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil