தீரன் சின்னமலை நினைவு தினம்: அமைச்சர் கே.என்.நேரு மலர்தூவி மரியாதை

தீரன் சின்னமலை நினைவு தினம்: அமைச்சர் கே.என்.நேரு மலர்தூவி மரியாதை
X

Theeran Chinnamalai Memorial Day: தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு சங்ககிரி கோட்டையில் அவரது படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Theeran Chinnamalai Memorial Day: தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சேலம் மாவட்டம், சங்ககிரிக் கோட்டை மற்றும் நினைவுத்தூண் அமைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று (03.08.2023) தியாகி தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடமான சேலம் மாவட்டம், சங்ககிரிக் கோட்டை மற்றும் அவரின் திருவுருவப் படத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாள் ஆண்டுதோறும் அரசு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடமான சங்ககிரிக் கோட்டையில் மலர்வளையம் வைத்து, தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண் அமைவிடத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்கள் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் எனும் ஊரில் பிறந்து, இளமையிலேயே பல்வேறு வித்தைப் பயிற்சிகளை இளைஞர் படைகளோடு உருவாக்கி வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான் ஆகியோரோடு சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டு பல்வேறு போர்களில் வெற்றிவாகை சூடியவர்.

ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்கள், அவரோடு இருந்தவர்களை வைத்தே அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து, அவரையும், அவரது சகோதரர்களையும் கைது செய்து, சங்ககிரிக் கோட்டையில் 1805 ஜூலை 31 (ஆடிப்பெருக்கு) அன்று தூக்கிலிட்டனர். ஆடிப்பெருக்கு அன்று தியாகி தீரன் சின்னமலை அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் வீர மரணமடைந்த அவருக்கு அரசின் சார்பில் ஆண்டுதோறும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல் மங்கை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.சிவகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. இராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம், துணை மேயர் சாரதா தேவி மற்றும் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி ஆகியோர் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா