கிராம சபைக் கூட்டங்களில் பார்வையாளராகக் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர்

கிராம சபைக் கூட்டங்களில் பார்வையாளராகக் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர்
X

கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பார்வையாளராகக் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.

Salem News Today: தொழிலாளர் தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் பார்வையாளராகக் கலந்துகொண்டார்.

Salem News Today: தொழிலாளர் தினத்தையொட்டி இன்று (01.05.2023) சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பார்வையாளராகக் கலந்துகொண்டு தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசால் பொதுமக்களின் நலனுக்கென பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அரசு நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கிராம சபைக் கூட்டங்கள் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச்22 உலக தண்ணீர் தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினம் மற்றும் நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் என மொத்தம் ஆண்டிற்கு 6 நாட்கள் நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில் மே 1 தொழிலாளர் தினத்தையொட்டி சேலம் மாவட்டத்திலுள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் இன்றைய தினம் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த வகையில் சேலம் ஊராட்சி ஒன்றியம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பார்வையாளராகக் கலந்து கொண்டுள்ளேன்.

இன்றைய தினம் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், கிராம வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ஜல் ஜீவன் (குடிநீர்) இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை குறைப்புத் திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நிலையைத் தக்க வைத்தல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், நெகிழிக்கு மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், நெகிழி மேலாண்மை குறித்த விழிப்புணர்வுகள், திரவக் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள், புதியதாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப் பணிகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

ஊராட்சிகளில் தற்போது நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், கனவுப் பள்ளிகள், நான் முதல்வன் திட்டம், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக் கருவேல மரம் அகற்றுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சியின் சிறப்பு பிரச்சனைகள் அல்லது தேவைகள், கல்வி அறிவு, பெண் கல்வியறிவு சதவீதம், ஆண், பெண் குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது. மேலும் கடந்த நிதி ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகள் தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலை வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்தும் இக்கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சௌ.தமிழரசி, கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் கே.சாமிநாதன் மற்றும் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil