சேலம் குழந்தைகள் காப்பகத்தில் மாணவி திடீர் உயிரிழப்பு

சேலம் குழந்தைகள் காப்பகத்தில் மாணவி திடீர் உயிரிழப்பு
X

பைல் படம்.

Salem News Today: சேலம் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Salem News Today: சேலம் கண்ணங்குறிச்சிதியில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமி ஒருவர் தங்கியிருந்தார். இவர் குழந்தை பருவத்திலிருந்து, அந்த காப்பகத்தில் வளர்ந்து வந்தார். விக்டோரியா அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தநிலையில், அந்த மாணவி கடந்த மாதம் 23ம் தேதி காய்ச்சலால் கடும் அவதிப்பட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து சிறுமியை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனிடையே சிறுமிக்கு கண் பார்வை மங்கியதால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மீண்டும் அந்த மாணவி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிறுமி திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கண்ணங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி

சேலம் அருகே உள்ள பெத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ். இவரின் மகன் சதீஷ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் தனது உறவினரான முருங்கப்பட்டியை சேர்ந்த அமுதவள்ளி, அவருடைய கணவர் கணேசன் ஆகியோர் வருவாய்த்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக தெரிவித்தனர்.

இதனை உண்மை என நம்பி அரசு வேலைக்காக அவர்களிடம் ரூ. 5 லட்சத்தை கொடுத்தேன்.

இதேபோன்று, மேலும் சில பேர் தங்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கில் அவரிடம் பணத்தை கொடுத்துள்ளனர். பின்னர் அமுதவள்ளியும், கணேசனும் எங்களுக்கு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பணியாற்ற பணி ஆணை கொடுத்தனர். ஆனால் அந்த பணி ஆணைகள் அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இதனால் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டால் அவர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து சதீசின் புகார் மனு குறித்து மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணி விசாரணை நடத்தினார். இதையடுத்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு, போலி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 தொழிலாளர்களுக்கு ஆயுள்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த முல்லைவாடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் ராமச்சந்திரன். (வயது 31). அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் கார்த்திகேயன் (31). இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி இவர்கள் இருவரும் சாலையில் தனியாக நடந்து சென்ற 16 வயது சிறுமியின் வாயில் துணியை திணித்து ஆத்தூர் பகுதியில் உள்ள உப்பு ஓடை பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். அங்கு இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த ராமச்சந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.

Tags

Next Story
Will AI Replace Web Developers